குமாரபாளையத்தில் வாலிபர் மர்ம சாவு

x
தினத்தந்தி 5 April 2022 11:43 PM IST (Updated: 5 April 2022 11:43 PM IST)
குமாரபாளையத்தில் வாலிபர் மர்மமாக இறந்தார்.
குமாரபாளையம்:
குமாரபாளையம் அம்மன் நகரில் வசிப்பவர் பெட் என்கிற கவுதம் (வயது 28). திருமணமாகாத இவர் ஆட்டோ ஓட்டி வந்தார். நேற்று முன்தினம் மதியம் வீட்டில் தூங்கினார். மாலை 6 மணி ஆகியும் அவர் படுக்கையில் இருந்து எழவில்லை. இதனால் அக்கம் பக்கத்தினர் அவரை குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து கவுதமின் நண்பர்கள் குமாரபாளையம் போலீசில் அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் மர்ம சாவு என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





