கூத்தப்பாடியில் தர்மராஜா திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்
கூத்தப்பாடியில் தர்மராஜா, திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி பக்தர்கள் பங்கேற்ற தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது.
பென்னாகரம்:
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே கூத்தப்பாடியில் தர்மராஜா மற்றும் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற உள்ளது. விழாவையொட்டி நேற்று காலை புனித நீர் மற்றும் முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் கொண்டு வரப்பட்டது. பின்னர் பென்னாகரம் விநாயகர் கோவில் அருகில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். இதில் கூத்தப்பாடி, மடம், கே.அக்ரஹாகரம், அளேபுரம், குள்ளாத்திரம்பட்டி, பொச்சாரம்பட்டி, சின்னப்பல்லனூர் உள்ளிட்ட 7 கிராம மக்கள் கலந்து கொண்டனர். இன்று கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை 7 ஊர் கவுண்டர்கள் மற்றும் விழா குழுவினர் செய்துள்ளனர்.
Related Tags :
Next Story