காரிமங்கலம் அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


காரிமங்கலம் அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 5 April 2022 11:43 PM IST (Updated: 5 April 2022 11:43 PM IST)
t-max-icont-min-icon

காரிமங்கலம் அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரிமங்கலம்:
காரிமங்கலம் அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கல்லூரி மாணவி
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள அருணாசலம் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் சத்யா (வயது 17). இவர் கிருஷ்ணகிரி அரசு கல்லூரியில் பி.எஸ்சி முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று காலை வீட்டில் தூங்கிய மாணவி நீண்ட நேரமாகியும் அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த  பெற்றோர் கதவை தட்டியும் திறக்கவில்லை. இதையடுத்து அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது மாணவி சத்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. 
போலீசார் விசாரணை
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கதறி அழுதனர். இதுகுறித்து காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
மேலும்  மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
1 More update

Next Story