கியாஸ், பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


கியாஸ், பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 April 2022 12:09 AM IST (Updated: 6 April 2022 12:09 AM IST)
t-max-icont-min-icon

கியாஸ், பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

சிவகங்கை,
சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் சிவகங்கை அரண்மனை வாசலில் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்ட தலைவர் ராஜரத்தினம், மாவட்ட துணைத்தலைவர் சண்முகராஜன், மகளிர் காங்கிரஸ் மாவட்ட தலைவி இமயமெடோனா, மாவட்ட கவுன்சிலர் சாந்தா ராணி, சிவகங்கை நகர்மன்ற உறுப்பினர்கள் விஜயகுமார், மகேஷ், வட்டார தலைவர் மதியழகன், நகர் தலைவர் பிரபாகரன், உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மோட்டார் சைக்கிள் ஒன்றுக்கும்,சிலிண்டர் ஒன்றுக்கும் மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இதைத்தொடர்ந்து சிலிண்டரை சுத்திவந்து ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 More update

Next Story