கோழிகளில் வெப்ப அயற்சியை குறைக்க தீவனத்தில் சோயா எண்ணெய், எலக்ட்ரோலைட்ஸ் சேர்க்க வேண்டும்-ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தல்
கோழிகளில் வெப்ப அயற்சியை குறைக்க தீவனத்தில் சோயா எண்ணெய், எலக்ட்ரோலைட்ஸ் சேர்க்க வேண்டும்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அடுத்த 3 நாட்கள் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். இன்றும், நாளை மறுநாளும் (வெள்ளிக்கிழமை) மழைக்கு வாய்ப்பு இல்லை. நாளை (வியாழக்கிழமை) 2 மி.மீட்டர் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. காற்று மணிக்கு 4 கி.மீ. வேகத்தில் தென்கிழக்கு திசையில் இருந்து வீசும்.
வெப்பநிலையை பொறுத்தவரை குறைந்தபட்சமாக 77 டிகிரியாகவும், அதிகபட்சமாக 102.2 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம் குறைந்தபட்சம் 50 சதவீதமாகவும், அதிகபட்சம் 75 சதவீதமாகவும் இருக்கும்.சிறப்பு வானிலையை பொறுத்த வரையில் கோடை காலத்தில் கோழிகளுக்கு நாள் முழுவதும் அதிக வெப்பம் இல்லாமல் குளிர்ச்சியாக குடிநீர் கிடைக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும். கோடை காலங்களில் காலை 11 மணிக்கு முன்பாகவே கோழிகளுக்கு தீவனம் அளித்து முடித்து விட வேண்டும்.
கோழி தீவனத்தில் தேவையான அளவு சோயா எண்ணெய், எலக்ட்ரோலைட்ஸ் மற்றும் உயிர்சத்துக்கள் சேர்ப்பதன் மூலம் வெப்ப அயற்சியின் தாக்கம் மற்றும் உற்பத்தி குறைவினை தவிர்க்கலாம். கோடை காலத்தில் கோழிப்பண்ணைகளில் இரவு நேரத்தில் ஒரு மணி நேரம் விளக்குகளை எரியவிடுவதன் மூலம் தினசரி கோழிகள் உட்கொள்ளும் அடர் தீவனத்தின் அளவினை அதிகரிக்கலாம். வெப்பம் அதிகமாக இருக்கும் மதிய வேளையில் தண்ணீர் தெளிப்பான்களை பயன்படுத்தி வெப்பத்தின் தாக்கத்தினை குறைக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story