நாமக்கல்லில் போக்குவரத்து விதிகளை மீறிய 60 பேர் மீது வழக்கு


நாமக்கல்லில் போக்குவரத்து விதிகளை மீறிய 60 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 6 April 2022 12:17 AM IST (Updated: 6 April 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் போக்குவரத்து விதிகளை மீறிய 60 பேர் மீது வழக்குப்பதியப்பட்டது.

நாமக்கல்:
நாமக்கல் நகரில் விபத்துக்கள் நடைபெறுவதை தடுக்க வாகன சோதனை நடத்தும்படி போக்குவரத்து துறை அலுவலர்கள் மற்றும் போக்குவரத்து போலீசாருக்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் உத்தரவிட்டு உள்ளார். அவரது உத்தரவின்படி நேற்று நாமக்கல்லில் திருச்சி சாலையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சக்திவேல், உமா மகேஸ்வரி, ராஜசேகரன், போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் ஷாஜகான் மற்றும் போலீசார் திடீர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் வந்த நபர்களை நிறுத்தி தணிக்கை செய்தனர். இதில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியது, செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டியது, ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்கியது என போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 60 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கப்பட்டது.

Next Story