ராசிபுரம் அருகே கோவில் திருவிழாவில் நேர்த்திக் கடனை நிறைவேற்ற பக்தர்களுக்கு சாட்டையடி


ராசிபுரம் அருகே கோவில் திருவிழாவில் நேர்த்திக் கடனை நிறைவேற்ற பக்தர்களுக்கு சாட்டையடி
x
தினத்தந்தி 6 April 2022 12:17 AM IST (Updated: 6 April 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

ராசிபுரம் அருகே கோவில் திருவிழாவில் பக்தர்கள் பூசாரியிடம் சாட்டையடி வாங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர்.

ராசிபுரம்:
ராசிபுரம் அருகே உள்ள அணைப்பாளையம் கிராமம் தேவேந்திரகுலவேளாளர் தெருவில் உள்ள பெரிய மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா கடந்த மாதம் 21-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து 22-ந் தேதி பூச்சாட்டுதல் நடந்தது. மேலும் கம்பம் நடுதல், கரகம் எடுத்தல் போன்ற நிகழ்வுகள் நடந்தன. நேற்று பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது.
அப்போது பக்தர்கள் பூசாரியிடம் சாட்டையடி வாங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர். இன்று (புதன்கிழமை) அதிகாலை அம்மன் அழைத்தல் நிகழ்ச்சியும், நாளை (வியாழக்கிழமை) காலை பொங்கல் வைத்தல், தீ மிதித்தல், கிடா வெட்டுதல், இரவு அம்மன் ஊர்வலம் நடக்கிறது. நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மஞ்சள் நீராடுதல் நடக்கிறது.

Next Story