மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்: நூற்பாலை மேற்பார்வையாளர் பலி


மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்: நூற்பாலை மேற்பார்வையாளர் பலி
x
தினத்தந்தி 6 April 2022 12:18 AM IST (Updated: 6 April 2022 12:18 AM IST)
t-max-icont-min-icon

பரமத்தி அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் நூற்பாலை மேற்பார்வையாளர் பலியானார்.

பரமத்திவேலூர்:
நூற்பாலைமேற்பார்வையாளர்
பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை அருகே உள்ள கருக்கம்பாளையத்தை சேர்ந்தவர் சம்பத். இவருடைய மகன் விக்னேஷ் (வயது 26). இவருக்கு, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஜமுனாதேவி என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்கள் 2 பேரும் பரமத்தி அருகே பிள்ளைகளத்தூரில் வசித்து வந்தனர். மேலும் பரமத்தி அருகே ஒரு தனியார் நூல் மில்லில் விக்னேஷ் மேற்பார்வையாளராகவும், ஜமுனாதேவி ஊழியராகவும் வேலை பார்த்து வந்தனர்.
கடந்த மாதம் 28-ந் தேதி இரவு கணவன்-மனைவி 2 பேரும் வேலைக்கு செல்வதற்காக பரமத்தி அருகே நாமக்கல்-கரூர் சாலையில் வலது பக்கமாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே திருச்சி மாவட்டம் கொளக்குடியை சேர்ந்த ஆனந்தன் (46) மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். 
விபத்தில் பலி
கண் இமைக்கும் நேரத்தில் இந்த 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் விக்னேஷ், ஆனந்தன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். ஜமுனாதேவி லேசான காயம் அடைந்தார். அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற விக்னேஷ் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 6 மாதத்தில் நூற்பாலை மேற்பார்வையாளர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story