பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்


பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 April 2022 12:37 AM IST (Updated: 6 April 2022 12:37 AM IST)
t-max-icont-min-icon

தோகைமலை, கடவூரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தோகைமலை, 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து தோகைமலை பஸ்நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு  ஒன்றிய செயலாளர் பெருமாள் தலைமை தாங்கினார். கட்சி நிர்வாகிகள் சுப்பிரமணி, முனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள். மேலும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினார்கள்.
கடவூர் தாலுகா ரெட்டியபட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் பழனிவேல் தலைமை தாங்கினார். இதில், கலந்து கொண்டவர்கள் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது. 100 நாள் வேலை திட்டத்திற்கு மத்திய அரசு கூடுதல் நிதி வழங்க வேண்டும், பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Next Story