புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது
நெல்லையில் புகையிலை பொருட்கள் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
நெல்லை டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரமநாயகம் மற்றும் போலீசார் டவுன் காட்சி மண்டபம் அருகே ரோந்து சென்றனர். அங்கு புகையிலை விற்றதாக நரசிங்கநல்லூர் பகுதியை சேர்ந்த சுடலை (வயது 34) என்பவரை கைது செய்து, 54 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். நெல்லை சந்திப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் மற்றும் போலீசார் அந்த பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் வைத்து புகையிலை விற்றதாக கீழநத்தம் பகுதியை சேர்ந்த இசக்கிராஜ் (55) என்பவரை கைது செய்து, 100 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கற்பகவள்ளி மற்றும் போலீசார் நெல்லை சந்திப்பு பகுதியில் ரோந்து சென்றபோது புகையிலை விற்றதாக கைலாசபுரம் பகுதியை சேர்ந்த சங்கரன் (60) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 60 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story