நெல்லையில் பரவலாக மழை


நெல்லையில் பரவலாக மழை
x
தினத்தந்தி 6 April 2022 12:43 AM IST (Updated: 6 April 2022 12:43 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.

நெல்லை:
நெல்லை மாநகர பகுதியில் நேற்று காலையில் இருந்து வெயில் அடித்தது. மாலை 4.30 மணிக்கு வானில் கருமேகங்கள் திரண்டன. மாலை 5 மணிக்கு நெல்லை மாநகர பகுதிகளான நெல்லை சந்திப்பு, தச்சநல்லூர், பாளையங்கோட்டை, கொக்கிரகுளம், கே.டி.சி.நகர், மகாராஜநகர் பகுதியில் பரவலாக மழை பெய்தது. இந்த மழையானது சுமார் ½ மணி நேரம் நீடித்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி கிடந்தது. இதேபோல் அம்பை, மணிமுத்தாறு, ராதாபுரம், கோபாலசமுத்திரம் பகுதிகளிலும் நேற்று மாலையில் மழை பெய்தது.


Next Story