மண் அள்ளும் எந்திரம் மோதி சப்-இன்ஸ்பெக்டர் படுகாயம்


மண் அள்ளும் எந்திரம் மோதி சப்-இன்ஸ்பெக்டர் படுகாயம்
x
தினத்தந்தி 6 April 2022 1:14 AM IST (Updated: 6 April 2022 1:14 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசி அருகே மண் அள்ளும் எந்திரம் மோதி சப்-இன்ஸ்பெக்டர் படுகாயம் அடைந்தார்.

சிவகாசி, 
சிவகாசி உட்கோட்டத்தில் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ராஜசேகர் (வயது 56). இவர் சம்பவத்தன்று பணி தொடர்பாக தனது வீட்டில் இருந்து சிவகாசி நகருக்குள் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது சாமியார்மடம் அருகில் வரும் போது மண் அள்ளும் எந்திரம் அவர் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிவகாசியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மகன் விக்னேஷ் திருத்தங்கல் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் மண் அள்ளும் எந்திரத்தை ஓட்டி வந்த சாத்தூர் அருகே உள்ள மேட்டமலையை சேர்ந்த கண்ணபிரான் மகன் விமல்ராஜ் (30) என்பவர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. 


Next Story