டீக்கடைக்காரர் வீட்டில் நகை திருட்டு
களக்காட்டில் டீக்கடைக்காரர் வீட்டில் 4½ பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர்.
களக்காடு:
களக்காடு கோவில்பத்து கீழத்தெருவை சேர்ந்தவர் பலவேசம் (வயது 45). இவர் களக்காடு அண்ணா சாலையில் டீக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு கோவில்பத்து கீழத்தெருவில் அடுத்தடுத்து 2 வீடுகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு பலவேசம் குடும்பத்தினருடன் மேல்ப்புற வீட்டில் தூங்க சென்றார். நள்ளிரவில் மர்மநபர்கள் கீழ்ப்புற வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 4½ பவுன் தங்க நகைகளை திருடிச் சென்று விட்டனர். நேற்று காலை வீட்டில் திருட்டு நடந்திருப்பதை அறிந்த பலவேசம் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story