சொத்துவரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

சொத்துவரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அரியலூர்:
அரியலூர் பஸ் நிலையம் எதிரே உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகில் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழக அரசு அறிவித்துள்ள சொத்து வரி, வீட்டு வரி உயர்வை கண்டித்து நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் ராமலிங்கம் வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசுகையில், தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு குடும்ப தலைவிக்கு ஆயிரம் ரூபாய், முதியோர் உதவி தொகை உயர்வு, எரிவாயு மானியம், நீட் தேர்வு ரத்து உள்பட பல வாக்குறுதிகளை அளித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் அம்மா இருசக்கர வாகன திட்டம், திருமண நிதியுதவி தாலிக்கு தங்கம் வழங்குவது போன்ற பல திட்டங்களை ரத்து செய்துவிட்டது. மேலும் தற்போது சொத்து வரியை உயர்த்தி உள்ளது. தி.மு.க.வினர் சொல்வதை செய்வோம் என்று கூறுவார்கள். ஆனால் அவர்கள் எதையும் செய்வதில்லை, என்றார். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story