குளத்தில் மூழ்கி தொழிலாளி சாவு

கடையநல்லூர் அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
கடையநல்லூர்:
கடையநல்லூர் அருகே புதுக்குடி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து (வயது 40), கட்டிட தொழிலாளி. இவர் தனது நண்பர் கருப்பசாமியுடன் அருகில் உள்ள குளத்தில் குளிக்க சென்றார். அப்போது குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்ற பேச்சிமுத்து நீரில் மூழ்கினார். அதன் பின்னர் திரும்பி வராததால், கருப்பசாமி ஊருக்குள் சென்று தகவல் தெரிவித்தார். இதையடுத்து கடையநல்லூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். குளத்தில் இறங்கி தேடி பேச்சிமுத்துவை பிணமாக மீட்டனர். இதுகுறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






