தென்காசியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


தென்காசியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 April 2022 2:09 AM IST (Updated: 6 April 2022 2:09 AM IST)
t-max-icont-min-icon

சொத்து வரி உயர்வை கண்டித்து தென்காசியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி:
தமிழகத்தில் சொத்து வரியை உயர்த்திய தி.மு.க. அரசை கண்டித்து தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட செயலாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். அ.தி.மு.க. வழிகாட்டுதல் குழு உறுப்பினர் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி, முன்னாள் எம்.எல்.ஏ. மனோகரன், முன்னாள் எம்.பி. கே.ஆர்.பி.பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி நகர செயலாளர் சுடலை வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் சண்முகசுந்தரம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் காத்தவராயன், மேலகரம் செயலாளர் கார்த்திக் குமார், இலஞ்சி செயலாளர் மயில்வேலன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நெல்லை முகிலன், இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் சீதாராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

கடையம் அருகே பாப்பான்குளத்தில் சுமார் 1,500 ஆண்டுகள் பழமையான கருத்தீஸ்வரர் கோவில் பராமரிப்பின்றி சிதிலமடைந்து உள்ளது. இக்கோவிலை புனரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் கோவிலுக்கு மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. வந்து ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், “பழமைவாய்ந்த கருத்தீஸ்வரர் உடனுறை அழகம்மாள் கோவிலுக்கு தமிழக அறநிலையத்துறை அமைச்சர் வந்து பார்வையிட்டு, பழமை மாறாமல் புனரமைக்க வேண்டும். கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன். வருகிற பட்ஜெட்டில் இக்கோவிலை புனரமைப்பதற்கு நிதி ஒதுக்க பேசுவேன்” என்றார்.



Next Story