‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தெருவிளக்கு வேண்டும்
மதுரை பாண்டி கோவில் பழைய பாதை பகுதியில் தெரு விளக்கு இல்லை. இதனால் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகின்றது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். ஆதலால் இப்பகுதியில் தெருவிளக்கு அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?.
அய்யம்பெருமாள், மதுரை.
விபத்து ஏற்படும் அபாயம்
விருதுநகர் மாவட்டம் பாலவநத்தம் மெட்டுக்குண்டு சாலையில் வேகத்தடை இல்லை. பள்ளிகூடம் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் கடைகள் அனைத்தும் இந்த சாலையின் அருகில் தான் உள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்லும் சிலர் அதிவேகத்தில் இந்த வழியே செல்கின்றனர். இதனால் பள்ளி குழந்தைகளுக்கும், பொதுமக்களுக்கும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் இப்பகுதியில் வேகத்தடை அமைத்து வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
செல்வராஜ், பாலவநத்தம்.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
மதுரை எச்.பி. காலனி பகுதியில் கழிவுநீர் கால்வாய் உடைந்து குடியிருப்புகளில் தேங்கி நிற்கின்றது. இதனால் இப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்படுட்டுள்ளது. மேலும் தேங்கிய கழிவுநீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி நோய்தொற்றும் ஏற்படுகின்றது. அதிகாரிகள் கால்வாயை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காளீஸ்வரி, மதுரை.
எரியாத தெருவிளக்கு
விருதுநகர் மாவட்டம் தம்பிபட்டி கிராமம் 2-வது பள்ளிவாசல் தெருவில் உள்ள தெருவிளக்கு சரியாக எரிவதில்லை. இதனால் இரவு நேரத்தில் இவ்வழியாக செல்ல பெண்கள் அச்சப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாரிமுத்து, தம்பிபட்டி.
Related Tags :
Next Story