பாவூர்சத்திரத்தில் தி.மு.க. பொதுக்கூட்டம் - நாஞ்சில் சம்பத் பங்கேற்பு


பாவூர்சத்திரத்தில் தி.மு.க. பொதுக்கூட்டம் - நாஞ்சில் சம்பத் பங்கேற்பு
x
தினத்தந்தி 6 April 2022 2:31 AM IST (Updated: 6 April 2022 2:41 AM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரத்தில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசினார்.

பாவூர்சத்திரம்:
தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் பாவூர்சத்திரத்தில் நடைபெற்றது. தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், “இந்திய அரசியல் வரலாற்றில் கவர்னரால் திருப்பி அனுப்பப்பட்ட அதே தீர்மானத்தை மீண்டும் கவர்னருக்கு திருப்பி அனுப்பிய ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின் தான். டெல்லியில் தி.மு.க. சார்பில் அண்ணா - கலைஞர் அறிவாலய கட்டிட திறப்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குத்துவிளக்கேற்றினார். இதை குறைவுப்படுத்தி பேசிய சீமான் மயங்கி விழுந்தார். அப்படி இருந்தும், அவருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போன் செய்து நலம் விசாரிக்கிறார். இப்படி ஒரு தலைவரை தமிழ்நாடு இப்போதுதான் பார்க்கிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட பா.ஜனதாவினர் 4 ஆயிரம் இடங்களில் டெபாசிட் இழந்துள்ளனர். 10 மாவட்டங்களில் உள்ளாட்சி பிரதிநிதிகளே இல்லை. இவர்களால் எப்படி தமிழகத்தில் ஆட்சி பொறுப்பிற்கு வர முடியும்” என்றார்.

தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி தலைவி தமிழ்செல்வி, யூனியன் தலைவிகள் காவேரி, திவ்யா, நகராட்சி தலைவி உமா மமேஷ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட கவுன்சிலர் சாக்ரடீஸ் நன்றி கூறினார்.

Next Story