இந்த ஆண்டுக்குள் 2 லட்சம் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும்


இந்த ஆண்டுக்குள் 2 லட்சம் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும்
x
தினத்தந்தி 6 April 2022 2:40 AM IST (Updated: 6 April 2022 2:40 AM IST)
t-max-icont-min-icon

இந்த ஆண்டுக்குள் 2 லட்சம் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் கூறினார்.

திருவிடைமருதூர்;
இந்த ஆண்டுக்குள் 2 லட்சம் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் என்று, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் கூறினார். 
வேலை வாய்ப்பு முகாம்
கும்பகோணம் அருகே உள்ள திருமங்கலக்குடியில் வருகிற 10-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய வந்திருந்த தொழிலாளர் நலத் துறை அமைச்சர் கணேசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது 
தமிழகத்தில் படித்து விட்டு வேலை இல்லாமல் உள்ள இளைஞர்களுக்கு உரிய வேலை வாய்ப்பு கிடைக்க தமிழக முதல்-அமைச்சர்  உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார். 
தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் இதுவரை 68,000 பேருக்கு வேலை  வழங்கப்பட்டுள்ளது.  அடுத்த இரு மாதங்களில் ஒரு லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும். இந்த ஆண்டு இறுதிக்குள் 2 லட்சம் பேருக்கு  வேலை கிடைக்க இலக்கு நிர்ணயித்து அதற்கான பணிகளில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  ஈடுபட்டுள்ளார். 
சமுதாய வளைகாப்பு
 தற்போது வெளிநாடுகளுக்குச் சென்று அன்னிய முதலீடுகளை பெற்று திரும்பிய தமிழக முதல்-அமைச்சர் அதன் மூலம் 14 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என அறிவித்துள்ளார். கொேரானா பரவல் காலத்தில் முன்கள பணியாளராக பணியாற்றிய செவிலியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள பிரச்சினையில் முதல்- அமைச்சர்  உரிய நடவடிக்கை எடுப்பார். இவ்வாறு அமைச்சர் கணேசன் கூறினார். 
தொடர்ந்து கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவிலில்
சமூக நலத்துறை, மகளிர் உரிமைத் துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதில் அரசு கொறடா கோவி. செழியன், தஞ்சை மாவட்ட கலெக்டர்  தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story