சமுதாய வளைகாப்பு விழா
திருப்பனந்தாளில் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது
திருப்பனந்தாள்;
சமூக நலன் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா திருப்பனந்தாளில் நடைபெற்றது.
விழாவுக்கு மாவட்ட திட்ட அலுவலர் ராஜ்குமார் தலைமை தங்கினார். ஒன்றியக்குழு தலைவர் தேவிரவிச்சந்திரன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் கோ.க. அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக அரசு தலைமை கொறடா கோவி. செழியன் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்து பேசினார்.
விழாவில் 100-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு மங்கல பொருட்கள் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. விழாவில் பேரூராட்சித் தலைவர் வனிதாஸ்டாலின், துணை தலைவர் கலைவாணி, செயல் அலுவலர் ராஜதுரை, வட்டார மருத்துவ அலுவலர் அபினேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story