மாற்றுத்திறன் குழந்தைகள் அடையாள அட்டை பெற மருத்துவ முகாம்
போளூரில் மாற்றுத்திறன் குழந்தைகள் அடையாள அட்டை பெற மருத்துவ முகாம் நடைபெற்றது.
போளூர்
திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் பிறப்பு முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் மருத்துவ முகாம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
மாவட்ட கல்வி அலுவலர் தயாளன் தலைமை தாங்கினார். புதிய அடையாள அட்டை பெறுதல், அட்டையை புதுப்பிப்பவர்கள், உதவி உபகரணங்கள் தேவைப்படுவோருக்கும் இந்த முகாம் நடந்தது.
காது, மூக்கு, தொண்டை மருத்துவர் பழனிவேல் ராஜன், குழந்தைகள் நல மருத்துவர் அருண், மனநல மருத்துவர் ராஜலட்சுமி, கண் மருத்துவர் கவுசல்யா, எலும்பு முறிவு மருத்துவர் மதி மணவாளன் ஆகியோர் குழந்தைகளை பரிசோதனை செய்து அடையாள அட்டைகளை வழங்கினார்கள்.
இதில் உதவி கல்வி ஆய்வாளர் ஷைனி மோல், வட்டார கல்வி அலுவலர்கள் சுந்தர், நேரு, மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுதா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story