கிராமங்களின் வளர்ச்சி குறித்து விளக்கப்படம் வரையும் நிகழ்ச்சி


கிராமங்களின் வளர்ச்சி குறித்து விளக்கப்படம் வரையும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 6 April 2022 4:53 PM IST (Updated: 6 April 2022 4:53 PM IST)
t-max-icont-min-icon

தூய்மை பாரத திட்டத்தின் கீழ் கிராமங்களின் வளர்ச்சி குறித்து விளக்கப்படம் வரையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வாணாபுரம்

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது கொட்டையூர் ஊராட்சி. இங்கு, தூய்மை பாரத திட்டத்தின் கீழ் கிராமங்களின் வளர்ச்சி குறித்து கோவில் வளாகத்தில் விளக்க வரைபடம் வரையும் நிகழ்ச்சி நடந்தது. 

அதில் கிராமத்தில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்தும், கிராமத்தில் சாலை வசதிகள் மற்றும் குடிநீர் உள்ளிட்டவைகள் குறித்தும் வரைபடம் வரையப்பட்டது. அதைத்தொடர்ந்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் கிராமத்தை மேம்படுத்துவது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. 

கிராமங்களை எவ்வாறு தூய்மையாக வைத்துக்கொள்வது, குப்பைகளை உடனுக்குடன் அகற்றுவது, குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து பொதுமக்களிடையே பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

அதில் ஊராட்சி மன்ற தலைவர் சிவரஞ்சனி மணிகண்டன், ஊராட்சி செயலர் ராஜசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story