முல்லை நகருக்கு அரசு பஸ் சேவை
முல்லை நகருக்கு அரசு பஸ் சேவை
கோத்தகிரி
நீலகிரி மாவட்டம் கொணவக்கரை அருகே உள்ள முல்லை நகரில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்துக்கு செல்லும் சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த கிராமத்துக்கு இயக்கப்பட்ட அரசு பஸ் சேவை கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக மாணவ-மாணவிகள், தொழிலாளர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு நடந்து சென்று கொணவக்கரைக்கு வந்து, அங்கிருந்து கோத்தகிரிக்கு செல்லும் நிலை உள்ளது. எனவே தங்கள் கிராமத்தில் சாலையை சீரமைத்து அரசு பஸ் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதை ஏற்று நெடுஞ்சாலைத்துறை மூலம் சாலை சீரமைக்கப்பட்டது. ஆனால் அரசு பஸ் சேவை தொடங்கவில்லை. பின்னர் தமிழக முதல்-அமைச்சரின் ‘மக்களை தேடி மக்களின் அரசு’ திட்டத்தின் கீழ் மனு அளித்தனர். இதன் பயனாக முல்லை நகருக்கு அரசு பஸ் சேவை மீண்டும் தொடங்கியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி முதல்-அமைச்சருக்கும், போக்குவரத்து அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.
Related Tags :
Next Story