முத்தையாபுரத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
முத்தையாபுரத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்பிக் நகர்:
தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் லட்சுமணன் நகர் 1-வது தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 55). கூலி தொழிலாளி. இவருக்கு கடந்த 20 வருடங்களுக்கு முன்பு நடந்த லாரி விபத்தில் முதுகுத் தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு அவர் சிகிச்சை பெற்றுள்ளார். அந்த பகுதியில் தற்போது அதிக வலி ஏற்பட்டு அவர் அவதிக்குள்ளாகி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டில் இருந்து வந்ததாகவும், குடும்ப பொறுப்பை இவரது மகன் பிரதீப் பார்த்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதில் மனமுடைந்து காணப்பட்ட அவர் நேற்று காலையில் வீட்டு மாடியில் உள்ள அறையில் செல்வராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவல் அறிந்த முத்தையாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செல்வராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story