13 நாகை மீனவர்கள் சொந்த ஊர் திரும்பினர்


13 நாகை மீனவர்கள் சொந்த ஊர் திரும்பினர்
x
தினத்தந்தி 6 April 2022 8:49 PM IST (Updated: 6 April 2022 8:49 PM IST)
t-max-icont-min-icon

இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 13 நாகை மீனவர்கள் சொந்த ஊர் திரும்பினர். அவர்களை கண்ணீர் மல்க உறவினர்கள் வரவேற்றனர்.

நாகப்பட்டினம்:
இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 13 நாகை மீனவர்கள் சொந்த ஊர் திரும்பினர். அவர்களை கண்ணீர் மல்க உறவினர்கள் வரவேற்றனர். 
கைது
நாகை கீச்சாங்குப்பத்தை சேர்ந்தவர் சிவா. இவருக்கு சொந்தமான விசைப்படகில் நாகையை சேர்ந்த சின்னதுரை, சிவபாரதி, சவுந்தர்ராஜன், ஜெயபிரகாஷ், செல்வம், செல்வநாதன், ரெத்தினசாமி, முருகேசன், அய்யப்பன், சத்தியநாதன், நிலவரசன், கிஷோர், கோகுல் ஆகிய 13 மீனவர்கள் நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் 19-ந்தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். 
இந்தநிலையில் கடந்த 23-ந்தேதி கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி நாகை மீனவர்கள் 13 பேரை விசைப்படகுடன் கைது செய்து இலங்கை சிறையில் அடைத்தனர். 
விடுதலை
இந்தநிலையில் நேற்று இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 13 மீனவர்களும் விமானம் மூலம் சென்னை வந்தனர். அவர்களை நாகை மீன்வளத்துறை அதிகாரிகள் மீட்டு அக்கரைப்பேட்டைக்கு வேன் மூலம் அழைத்து வந்தனர். நீண்ட நாட்களுக்கு பிறகு மீனவர்களை பார்த்த உறவினர்கள் கண்ணீர் மல்க அவர்களை வரவேற்றனர்.

Next Story