சுட்டெரிக்கும் வெயிலுக்கு தாக்குப்பிடிக்காமல் மாமரங்களில் உதிரும் பிஞ்சுகள்


சுட்டெரிக்கும் வெயிலுக்கு தாக்குப்பிடிக்காமல் மாமரங்களில் உதிரும் பிஞ்சுகள்
x
தினத்தந்தி 6 April 2022 8:56 PM IST (Updated: 6 April 2022 8:56 PM IST)
t-max-icont-min-icon

சுட்டெரிக்கும் வெயிலுக்கு தாக்குப்பிடிக்காமல் மாமரங்களில் பிஞ்சுகள் உதிர்ந்து வருகிறது.

பழனி:
பழனி அருகே ஆயக்குடி, கோம்பைபட்டி, புளியமரத்துசெட் ஆகிய பகுதிகளில் உள்ள தோட்டங்களில் மா சாகுபடி அதிகளவில் நடந்து வருகிறது. இங்கு விளையும் மாங்காய்கள் பழனி, ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மாமரங்கள் பூத்துக்குலுங்கின.
இதையடுத்து விவசாயிகள் அவற்றுக்கு மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தொடர்ந்து பழனி பகுதியில் சுட்டெரிக்கும் வெயில் வாட்டி வதைக்கிறது. வெயிலுக்கு தாக்குப்பிடிக்காமல் மாமரங்களில் இருந்து பிஞ்சுகள் உதிர்ந்து வருகின்றன. இதனால் விளைச்சல் பாதிக்கப்பட்டு, விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, இந்த ஆண்டு மா மரங்களில் நல்ல முறையில் பூக்கள் பூத்தன. ஆனாலும் கடும் வெயில் நிலவி வருவதால் பெரும்பாலான மரங்களில் பூக்கள் உதிர்ந்துவிட்டன.
இதேபோல் காய்கள் பிடித்துள்ள மரங்களில் சிறியதாக இருக்கும்போதே வெயில் தாங்காமல் பிஞ்சுகள் வெதும்பி பழுத்து விழுந்து விடுகிறது. கோடை மழை பெய்தால் மட்டுமே மா மற்றும் தென்னை மரங்கள் உயிர்ப்பெறும் என்றனர்.

Next Story