அறிவியல் கண்காட்சி


அறிவியல் கண்காட்சி
x
தினத்தந்தி 6 April 2022 9:04 PM IST (Updated: 6 April 2022 9:04 PM IST)
t-max-icont-min-icon

பன்னாள் அரசு உயர்நிலை-தொடக்கப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி

வாய்மேடு:
வாய்மேட்டை அடுத்த பன்னாள் ஊராட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் குமணன், ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் மோகனசுந்தரம் தலைமை தாங்கினார். இதில் பள்ளி வளர்ச்சி குழு தலைவர் சண்முகசுந்தரம், பொருளாளர் கலியவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அறிவியல் கண்காட்சியில்  மாணவர்கள் 125 படைப்புகளை ஆசிரியரிடம் செய்து காண்பித்தனர். நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர் சங்கத்தை சேர்ந்த ராஜ்குமார் கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். இதில் தலைமை ஆசிரியர்கள் பொதுவுடைசெல்வன், சோமசுந்தரம், வக்கீல்   தமிழ்வேந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story