குடியாத்தத்தில் பெண்ணை தாக்கி 7 பவுன் செயின் பறிப்பு


குடியாத்தத்தில் பெண்ணை தாக்கி 7 பவுன் செயின் பறிப்பு
x
தினத்தந்தி 6 April 2022 10:26 PM IST (Updated: 6 April 2022 10:26 PM IST)
t-max-icont-min-icon

குடியாத்தத்தில் பெண்ணை தாக்கி 7 பவுன் செயினை பறித்து சென்ற 2 மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

குடியாத்தம்

குடியாத்தத்தில் பெண்ணை தாக்கி 7 பவுன் செயினை பறித்து சென்ற 2 மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பெண்ணை தாக்கி செயின் பறிப்பு

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ெரயில் நிலையத்தை அடுத்த நாகல் ஆர்.எஸ்.ரோடு பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி விவசாயி. இவரது மனைவி கீதாஞ்சலி (வயது 55). இவர்  தனது வீட்டின் அருகே சாலையில் அமர்ந்து புளியை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் திடீரென கீதாஞ்சலி கழுத்தில் அணிந்திருந்த நகையை பறிக்க முயற்சித்துள்ளனர். சுதாரித்துக்கொண்ட கீதாஞ்சலி நகையை கெட்டியாக பிடித்துக்கொண்டு கூச்சலிட்டு உள்ளார்.

உடனே மர்ம நபர்கள், கீதாஞ்சலியை தாக்கி 7 பவுன் தாலி செயினை பறித்துக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். கீதாஞ்சலியின் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் மர்ம நபர்களை விரட்டிச் சென்றனர். ஆனால் அவர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.

வலைவீச்சு

இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நிர்மலா உள்ளிட்ட போலீசார் நகை பறிப்பு சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் உடனடியாக அனைத்து பகுதியிலும் தீவிர வாகன சோதனை நடத்த உத்தரவிட்டார். அதன்பேரில் குடியாத்தம், கே.வி.குப்பம், பள்ளிகொண்டா உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினர்.

நகை பறித்து பறிகொடுத்த கீதாஞ்சலி சில வருடங்களுக்கு முன்பு சாலையில் நடந்து செல்லும் போது இதே போல் மர்ம நபர்கள் கழுத்திலிருந்து 5 பவுன் நகையை பறித்துச் சென்றது குறிப்பிடத்தக்கது. 

Next Story