அரூர் பகுதியில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட உர கடையின் உரிமம் ரத்து


அரூர் பகுதியில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட உர கடையின் உரிமம் ரத்து
x
தினத்தந்தி 6 April 2022 10:43 PM IST (Updated: 6 April 2022 10:43 PM IST)
t-max-icont-min-icon

அரூர் பகுதியில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட உர கடையின் உரிமம் ரத்து செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியில் தனியார் உர கடைகளில் வேளாண்மை தரக்கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் தாம்சன், வேளாண் உதவி இயக்குனர் (பொறுப்பு) இளவரசி ஆகியோர் திடீர் ஆய்வு நடத்தினார்கள். அப்போது 2 உர கடைகளில் விதிகளை மீறி செயல்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து ஒரு கடையின் உர விற்பனை உரிமத்தை அதிகாரிகள் ரத்து செய்தனர். மற்றொரு உர கடையில் உரங்கள் விற்பனைக்கு தடை விதித்தனர். தர்மபுரி மாவட்டத்தில் அரசு விதிமுறைகளை மீறி உரங்களை விற்பனை செய்வது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட உர கடைகளின் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படுவதுடன் உரக்கட்டுப்பாட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தர்மபுரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் வசந்தரேகா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Next Story