திருவாரூரில், பா.ஜனதா கட்சியினர் ஊர்வலம்
கட்சி நிறுவன நாளையொட்டி திருவாரூரில் பா.ஜனதா கட்சியினர் ஊர்வலம் சென்றனர்.
திருவாரூர்:-
பா.ஜனதா கட்சியின் 42-வது நிறுவன நாளையொட்டி திருவாரூரில் பா.ஜனதா கட்சியினர் ஊர்வலம் நடத்தினர். திருவாரூர் ரெயில் நிலையத்தில் இருந்து ஊர்வலம் புறப்பட்டது. இதற்கு பா.ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் கோட்டூர் ராகவன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர்கள் துரையரசு, பாஸ்கர், விவசாய அணி செயலாளர் கோவி.சந்துரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக நகர தலைவர் சங்கர் வரவேற்றார். இதில் கட்சியின் மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம் கலந்து கொண்டு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ஊர்வலம் பழைய பஸ் நிலையம், பனகல் ரோடு வழியாக சென்று தெற்கு வீதியில் நிறைவடைந்தது. இதில் மாவட்ட செயலாளர் பால.பாஸ்கர், ஒன்றிய தலைவர் ரெத்தினவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊடக பிரிவு மாவட்ட செயலாளர் ரவி நன்றி கூறினார்.
இதேபோல் நீடாமங்கலத்தில் பா.ஜனதா கட்சியின் நிறுவன நாள் விழா வடக்கு ஒன்றிய தலைவர் ஜெயக்குமார் தலைமையில் கொண்டாடப்பட்டது. இதில் தெற்கு ஒன்றிய தலைவர் விஸ்வா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
Related Tags :
Next Story