பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
புங்கனூர் ஊராட்சியில் பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
சீர்காழி:
சீர்காழி ஊராட்சி ஒன்றியம் புங்கனூர் ஊராட்சி மேலவரவுகுடி கிராமத்தில் குழந்தைகள், பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி வைத்தீஸ்வரன்கோவில் போலீஸ்துைற சார்பில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜுனைதா பேகம் கமாலுதீன் தலைமை தாங்கினார். இதில் வைத்தீஸ்வரன் கோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காயத்ரி கலந்துகொண்டு குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் பேசினார். நிகழ்ச்சியில் மகளிர் சுயஉதவிக் குழுவினர், பள்ளி மாணவிகள் மற்றும் தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story