மரத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி

மரத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் தொழிலாளி பலியானார்.
கிருஷ்ணராயபுரம்,
லாலாபேட்டையை அடுத்துள்ள பிள்ளா பாளையத்தை சேர்ந்தவர் ராஜாங்கம் (வயது 42), கூலி தொழிலாளி. இவரும் அதே பகுதியை சேர்ந்த கங்காகார்த்திக் (38) ஆகியோர் வயல் வேலைக்கு நேற்று ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை கங்காகார்த்திக் ஓட்டினார். பூனாட்சி அம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மரத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ராஜாங்கம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த லாலாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






