எடப்பாடி பழனிசாமி உள்பட 3 ஆயிரம் பேர் மீது வழக்கு


எடப்பாடி பழனிசாமி உள்பட 3 ஆயிரம் பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 7 April 2022 12:40 AM IST (Updated: 7 April 2022 12:40 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி உள்பட அ.தி.மு.க.வினர் 3 ஆயிரம் பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

திருச்சி, ஏப்.7-
திருச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி உள்பட அ.தி.மு.க.வினர் 3 ஆயிரம் பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வரி உயர்வை அறிவித்த தி.மு.க. அரசை கண்டித்தும், தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதன் ஒருபகுதியாக திருச்சி ஜங்ஷன் ரெயில்நிலையம் அருகே தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி உள்பட முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி.க்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
இந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் உள்பட அ.தி.மு.க.வினர்  3 ஆயிரம் பேர் மீது திருச்சி கண்டோன்மெண்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேரன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 143 (சட்டவிரோதமாக கூட்டம் கூடுதல்), பிரிவு 151 (ஐந்து அல்லது அதற்கு மேலான நபர்கள் கூட்டத்தை கலைக்க கட்டளையிட்ட பின்னர் கூடுவது அல்லது தொடர்வது), 188 (பொதுப்பணியாளரால் முறைப்படி பிரகடனப்படுத்த உத்தரவிற்கு கீழ்படியாமை), 283 (பொதுப்பாதையில் தடை ஏற்படுத்துவது) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story