கல்லூரி மாணவியை கத்தியால் வெட்டிய வாலிபர் கோர்ட்டில் சரண்
காவேரிப்பாக்கம் அருகே கல்லூரி மாணவியை கத்தியால் வெட்டிய வாலிபர் கோர்ட்டில் சரணடைந்தார்.
காவேரிப்பாக்கம்
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த உத்திரம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் (வயது 50). இவரது மகள் நந்தினி (21). இவர் காவேரிப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
நந்தினி கடந்த மாதம் 4-ந் தேதி மாலை வீட்டின் அருகே உள்ள நாகத்தம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றபோது அதேப் பகுதியைச் சேர்ந்த நிதிஷ்குமார் (23) என்பவர் பின் தொடர்ந்து சென்று காதலிக்க வற்புறுத்தியதாக தெரிகிறது.
இதற்கு மாணவி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த நிதிஷ்குமார் தான் கையில் வைத்திருந்த கத்தியால் நந்தினியின் கழுத்து, கை, முதுகு உள்ளிட்ட பகுதிகளில் கத்தியால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார்.
மாணவி நந்தினி ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்துள்ளார். இது தொடர்பாக நந்தினி காவேரிப்பாக்கம் போலிசில் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் பாலாஜி வழக்குப் பதிவு செய்து நிதிஷ்குமாரை தேடி வந்தனர்.
இந்தநிலையில் தலைமறைவாக இருந்த நிதிஷ்குமார் நேற்று திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் கோர்ட்டில் சரண் அடைந்துள்ளார்.
Related Tags :
Next Story