ரூ.3¼ லட்சம் உரியவர்கள் வங்கி கணக்கில் சேர்ப்பு
ஆன்லைன் மூலம் மோசடி செய்யப்பட்ட ரூ.3 லட்சத்து 33 ஆயிரம் சைபர் கிரைம் போலீசாரின் நடவடிக்கையால் உரியவர்கள் வங்கி கணக்கில் சேர்க்கப்பட்டது.
சேலம்:-
ஆன்லைன் மூலம் மோசடி செய்யப்பட்ட ரூ.3 லட்சத்து 33 ஆயிரம் சைபர் கிரைம் போலீசாரின் நடவடிக்கையால் உரியவர்கள் வங்கி கணக்கில் சேர்க்கப்பட்டது.
வெளிநாட்டில் வேலை
சேலம் சூரமங்கலம் ஆசாத் நகரை சேர்ந்தவர் சாகுல். கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்கி கணக்கு காலாவதியாகி விட்டது. அதை புதுப்பிக்க சில ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அவரது செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்தது. வங்கி கணக்கு ஆவணங்களை ஆன் லைன் மூலம் தெரிவித்தார்.. சிறிது நேரத்திற்கு பிறகு அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 58 ஆயிரத்து 128 எடுக்கப்பட்டதாக தகவல் வந்தது.
அதே போன்று சேலம் சங்கர் நகரை சேர்ந்தவர் இஸ்மாயில் என்பவரது செல்போன் எண்ணுக்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்பு உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று குறுஞ்செய்தி வந்தது. அவர் குறிப்பிட்ட செல்போன் எண்ணில் தொடர்பு கொண்ட போது விசா மற்றும் மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட பல ஆவணங்கள் தயார் படுத்த பணம் கட்ட வேண்டும் என்று விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
துரித விசாரணை
இதை நம்பிய அவர் ஆன்லைன் மூலம் ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்து 227 அனுப்பினார். ஆனால் வேலை கிடைக்கவில்லை. இந்த நிலையில் பணம் மோசடி நடந்தது குறித்து இருவரும் சேலம் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தனர்.
இந்த 2 வழக்கு குறித்து போலீசார் துரித விசாரணை நடத்தினர். அப்போது சாகுல் வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 58 ஆயிரத்து 128 மோசடியாக, மின் கட்டணம் செலுத்தப்பட்டு இருப்பது தெரிந்தது. அந்த பணத்தை மீண்டும் சாகுல் வங்கி கணக்கில் சேர்க்க நடவடிக்கை எடுத்தனர்.
அதே போன்று இஸ்மாயிலிடம் மோசடி செய்யப்பட்ட பணத்தை அவரது வங்கி கணக்கில் செலுத்த நடவடிக்கை எடுத்தனர். அதன்படி 2 பேரிடம் ஆன் லைன் மூலம் மோசடி செய்யப்பட்ட ரூ.3 லட்சத்து 33 ஆயிரத்து 355 அவர்களது வங்கி கணக்கில் சேர்த்து சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story