ஜவுளி ரகங்களை அனுப்புவதாக கூறி இலங்கையை சேர்ந்தவரிடம் ரூ.41 லட்சம் மோசடி; சென்னிமலை வியாபாரி கைது
ஜவுளி ரகங்களை அனுப்புவதாக கூறி இலங்கையை சேர்ந்தவரிடம் ரூ.41 லட்சம் மோசடி செய்ததாக சென்னிமலையை சேர்ந்த வியாபாரி கைது செய்யப்பட்டார்.
ஜவுளி ரகங்களை அனுப்புவதாக கூறி இலங்கையை சேர்ந்தவரிடம் ரூ.41 லட்சம் மோசடி செய்ததாக சென்னிமலையை சேர்ந்த வியாபாரி கைது செய்யப்பட்டார்.
ஜவுளி ஏற்றுமதி வியாபாரி
ஈரோடு மாவட்டம் சென்னிமலை நேதாஜி வீதியை சேர்ந்தவர் மோகனவண்ணன் (வயது 30). இவர் ஜவுளி ரகங்கள் ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வந்தார். இவரிடம் இலங்கையை சேர்ந்த அப்துல் அஷ்ரப் முகமது ரஹீம் என்பவர் ஜவுளிகள் வாங்குவதற்காக தொடர்பு கொண்டுள்ளார். இதற்காக அப்துல் அஷ்ரப் முகமது ரஹீம் மோகனவண்ணணின் வங்கி கணக்கில் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் காசோலைகள் மூலம் இரு தவணைகளாக 41 லட்சத்து 432 ரூபாயை செலுத்தியுள்ளார். ஆனால் இந்த பணத்திற்கான ஜவுளி ரகங்களை மோகனவண்ணன் இலங்கைக்கு அனுப்பாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
சிறையில் அடைப்பு
மோகன்வண்ணன் துணி ரகங்களை அனுப்பாமல் இருந்ததால் ஏமாற்றமடைந்த அப்துல் அஷ்ரப் முகமது ரஹீம் இந்திய தூதரகத்தின் உதவியுடன் கடந்த மார்ச் மாதம் இ-மெயில் மூலமாக போலீசில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து மோகனவண்ணனை தேடி வந்தார்.
இந்த நிலையில் முன்ஜாமீன் பெறுவதற்காக மோகனவண்ணன் சென்னையில் இருந்தது போலீசாருக்கு தெரியவந்தது. உடனடியாக சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் உத்தரவின்பேரில் போலீசார் சென்னை சென்று மோகனவண்ணனை கைது செய்து அழைத்து வந்தனர். பின்னர் நேற்று பெருந்துறை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தி கோபியில் உள்ள சிறையில் அடைத்தார்கள்.
Related Tags :
Next Story