கல்லூரி மாணவி மாயம்
கல்லூரி மாணவி மாயமானார்.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள சுண்டிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மதியழகன். இவரது மனைவி சுமித்ரா, மகள் அனுசியா(வயது 17). குடும்ப சூழ்நிலை காரணமாக தா.பழூர் அருகே உள்ள சிலால் கிராமத்தில் உள்ள சுமித்ராவின் தம்பி வீட்டில் அனுசியா தங்கியிருந்து ஜெயங்கொண்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டயப் படிப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை கல்லூரிக்கு சென்ற அவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையறிந்த சுமித்ரா சுண்டிப்பள்ளத்தில் இருந்து சிலால் கிராமத்திற்கு வந்து பல்வேறு இடங்களில் தேடியும் அனுசியா கிடைக்கவில்லை. இது குறித்து தா.பழூர் போலீசில் சுமித்ரா புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Related Tags :
Next Story