கோர்ட்டில் ஆஜராகாமல் 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது
பாளையங்கோட்டையில் கோர்ட்டில் ஆஜராகாமல் 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை:
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் மரக்கடை பெரிய மள்ளர் தெருவைச் சேர்ந்தவர் ஸ்டான்லி சற்குணம் தங்கையா (வயது 38). இவர் ஒரு திருட்டு வழக்கில் பாளையங்கோட்டை பெருமாள்புரம் போலீசாரால் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
அதன்பின்னர் கடந்த 2019-ம் ஆண்டில் இருந்து அவர் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதனால் அவருக்கு கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. இதையடுத்து போலீசார் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் ஸ்டான்லி சற்குணம் தங்கையாவை போலீசார் நேற்று கைது செய்தனர்.
Related Tags :
Next Story