புகார் பெட்டி
புகார் பெட்டி
கழிவுநீர் ஓடை அமைக்கப்பட்டது
பூதப்பாண்டி அழகம்மன்கோவில் தெருவில் கழவுநீர் ஓடை அமைக்கப்படாமல் இருந்தது. இதனால் அந்த பகுதியில் கழிவு நீா் தெருவில் பாய்ந்தோடி சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. இதுபற்றி தினத்தந்தி புகார் ெபட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இந்தநிலையில் செய்தி எதிரொலியாக உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவு நீர் ஓடை அமைத்தனர். செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும்,நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
-எஸ்.நாராயணசாமி, அழகம்மன்கோவில் தெரு, பூதப்பாண்டி.
போக்குவரத்துக்கு இடையூறான வாகனங்கள்
கருங்கலில் இருந்து பூக்கடை வரும் சாலையில் கருங்கல் தினசரி மார்க்கெட் உள்ளது. இப்பகுதியில் அதிகமான வாகனங்கள் செல்கின்றது. சில நேரங்களில் பஸ் போக்குவரத்திற்கு இடையூறாக சிலர் வாகனங்களை சாலையோரங்களில் நிறுத்தி செல்கின்றனர் .இதனால் பொதுமக்களும் பள்ளி, கல்லூரி மாணவா்களும் சிரமம் அடைகின்றனர். இதனை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
- ஜெஸ்பின், சிராயன்குழி.
சாலை சீரமைக்கப்படுமா?
குளச்சல் நகராட்சி 17-வது வார்டு கீழத்தெரு பகுதியில் இரண்டு மாத்திற்கு முன்பு தான் சாலை புதிதாக அமைக்கப்பட்டது. இந்த சாலையில் தற்போது பள்ளம் விழுந்து குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் ் இருப்பதால் உடனடியாக நகராட்சி நிர்வாகமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உடனடியாக சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அபுதாஹீர், குளச்சல்.
சேதமடைந்த மின்கம்பம்
நாகர்கோவில் வடசேரியில் ஓட்டுப்புைர தெருஉள்ளது. இந்த தெருவில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்த வண்ணம் காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் மின்கம்பம் முறிந்து விழுந்து விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பத்தை நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வி.பிரபு, ஓட்டுப்புரை தெரு.
Related Tags :
Next Story