நிலத்தரகர் கொலையில் கைதான தம்பதி உள்பட 6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நெல்லையில் நிலத்தரகர் கொலையில் கைதான தம்பதி உள்பட 6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நெல்லை:
நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள பாளையஞ்செட்டி குளத்தை சேர்ந்தவர் வைகுண்டம் (வயது 48). நிலத்தரகரான இவர் கடந்த மாதம் மர்ம நபர்களால் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த ராஜன் (67), அவருடைய மனைவி லீலா என்ற செல்வலீலா (57), பாபு அலெக்சாண்டர் (37), ஜாக்குலின் (54), பிலீப் என்ற அருள் பிலீப்ராஜ் (28), அண்டோ என்ற அண்டோ நல்லையா (27) ஆகிய 6 பேரை கைது செய்தனர். இதில் ஜாக்குலின், லீலா ஆகியோர் மதுரை பெண்கள் தனிச்சிறையிலும், ராஜன் உள்ளிட்ட 4 பேரும் பாளையங்கோட்டை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் ராஜன் உள்ளிட்ட 6 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், மாவட்ட கலெக்டர் விஷ்ணுவுக்கு பரிந்துரை செய்தார். அதனை கலெக்டர் ஏற்று ராஜன் உள்ளிட்ட 6 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், ராஜன் உள்ளிட்ட 6 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகலை அந்தந்த சிறை அதிகாரிகளிடம் வழங்கினார்.
Related Tags :
Next Story