காங்கிரஸ் சார்பில் நூதன ஆர்ப்பாட்டம்
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் சார்பில் சாத்தூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சாத்தூர்,
பெட்ரோல், டீசல், கியாஸ் மற்றும் சுங்க கட்டண விலையை தொடர்ந்து உயர்த்தி வரும் மத்திய அரசை கண்டித்தும், விலைவாசி உயர்வினால் ஏற்படும் மக்களின் துயரங்களை போக்கவும் சாத்தூர் காளியம்மன் கோவிலில் 101 தேங்காய் உடைத்து நூதன முறையில் சாத்தூர் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விருதுநகர் மாவட்ட துணைத்தலைவர் அரசன் கார்த்திக் தலைமை தாங்கினார். விருதுநகர் மேற்கு மாவட்ட பொதுச்செயலாளர் ஜோதி நிவாஸ், நகர காங்கிரஸ் தலைவர் அய்யப்பன், கிழக்கு வட்டார தலைவர் இருக்கன்குடி சுப்பையா, மாவட்ட செயலாளர் சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதற்கான ஏற்பாடுகளை சாத்தூர் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் கார்த்திக் செய்திருந்தார். இதில் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story