முகவூர் கூட்டுறவு கடன் சங்கத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு


முகவூர் கூட்டுறவு கடன் சங்கத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 7 April 2022 3:47 AM IST (Updated: 7 April 2022 3:47 AM IST)
t-max-icont-min-icon

ராஜபாளையம் அருகே முகவூர் கூட்டுறவு கடன் சங்கத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராஜபாளையம், 
ராஜபாளையம் அருகே முகவூர் கூட்டுறவு கடன் சங்கத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  
முற்றுகை போராட்டம் 
ராஜபாளையம் அருகே முகவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் தேவதானம், கோவிலூர், தளவாய்புரம், புத்தூர், முத்துசாமிபுரம் உள்ளிட்ட 10- க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வங்கி கணக்கு வைத்துள்ளனர். 
இவர்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்க நகையை அடகு வைத்து கடன் வாங்கி உள்ளனர். இவர்களில் 966 நபர்கள் தமிழக அரசின் அறிவிப்பின்படி 40 கிராமுக்கு கீழ் நகையை அடகு வைத்தவர்கள். ஆனால் இங்கு அடகு வைத்துள்ள 166 நபர்கள் மட்டுமே நகை கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்கள் என அறிவிப்பு வந்துள்ளது. மீதமுள்ள 800 நபர்களுக்கு தள்ளுபடி இல்லை என்பதால், ஆத்திரம் அடைந்த பொது மக்கள் கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை 
இவர்களுடன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்தவர்களும் இணைந்து, 40 கிராமுக்கு கீழ் நகை வைத்துள்ள அனைவருக்கும் தள்ளுபடி செய்ய வேண்டும். என வலியுறுத்தினர். 
இதனால் முத்துசாமிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து தளவாய்புரம் போலீசார், கூட்டுறவு கடன் சங்க நிர்வாகிகள் ஆகியோர் பொது மக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். தள்ளுபடி அறிவிப்பில் பெயர் இல்லாத 800 நபர்களுக்கு, தள்ளுபடி வழங்க கோரி அரசுக்கு மீண்டும் பரிசீலனை செய்து மனு அனுப்பப்படும் என போலீஸ் அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story