கார் மோதி விவசாயி சாவு


கார் மோதி விவசாயி சாவு
x
தினத்தந்தி 7 April 2022 4:00 AM IST (Updated: 7 April 2022 4:00 AM IST)
t-max-icont-min-icon

பனவடலிசத்திரம் அருகே கார் மோதி விவசாயி பரிதாபமாக இறந்தார்.

பனவடலிசத்திரம்:
தென்காசி மாவட்டம் பனவடலிசத்திரம் அருகே உள்ள மருக்காலங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லையா (வயது 65). விவசாயியான இவர் மருக்காலங்குளம் அருகே நரிக்குடி விலக்கில் உள்ள ஓட்டலில் கழிவுநீரை எடுத்துக்கொண்டு சாலையை கடக்க முயன்றார். அப்போது ராஜபாளையத்தில் இருந்து நெல்லை நோக்கி சென்ற கார் அவர் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் தூக்கி வீசப்பட்ட செல்லையா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஊத்துமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் இனாம் செட்டிகுளம் ஊரைச் சேர்ந்த தனசிங் ராஜா மகன் சங்கர் (38) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 More update

Next Story