முப்பிடாரி அம்மன் கோவில் பங்குனி தேரோட்டம்


முப்பிடாரி அம்மன் கோவில் பங்குனி தேரோட்டம்
x
தினத்தந்தி 7 April 2022 4:12 AM IST (Updated: 7 April 2022 4:12 AM IST)
t-max-icont-min-icon

சுரண்டை முப்பிடாரி அம்மன் கோவில் பங்குனி தேரோட்டம் நடந்தது.

சுரண்டை:
சுரண்டை சிவகுருநாதபுரம் முப்பிடாரி அம்மன் கோவில் பங்குனி திருவிழா கடந்த 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சிறப்பு பூஜைகள், 1,008 திருவிளக்கு பூஜை, வில்லிசை, ஆன்மிக சொற்பொழிவு, பட்டிமன்றம், மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடந்தது. 7-ம் நாள் இரவில் அம்மன் சப்பர பவனி நடைபெற்றது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. மாலை 4 மணிக்கு தேரில் முப்பிடாரி அம்மன் எழுந்தருளினார். தேர் 4 ரதவீதிகளில் சென்று நிலையை அடைந்தது.  விழா ஏற்பாடுகளை இந்து நாடார் மகமை கமிட்டி டிரஸ்ட் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

Next Story