சாலையோரத்தில் நிறுத்தப்படும் விரைவு பஸ்கள்
கூடலூர் பஸ் நிலையத்தில் இடவசதி இல்லாததால் சாலையோரத்தில் நிறுத்தப்படும் விரைவு பஸ்கள் நிறுத்தப்படுகின்றன. இதற்கு நடவடிக்கை எடுக்க பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கூடலூர்
கூடலூர் பஸ் நிலையத்தில் இடவசதி இல்லாததால் சாலையோரத்தில் நிறுத்தப்படும் விரைவு பஸ்கள் நிறுத்தப்படுகின்றன. இதற்கு நடவடிக்கை எடுக்க பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இடவசதி இல்லை
கேரளா-கர்நாடக மற்றும் தமிழகம் என 3 மாநில எல்லைகள் இணையும் நீலகிரி மாவட்டம் கூடலூரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. அங்கு வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி இல்லை. குறிப்பாக 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பஸ் நிலையத்தில் அரசு பஸ்களை நிறுத்த கூட போதிய இடவசதி இல்லை.
இதனால் முக்கிய ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் சாலையோரம் நிறுத்தி வைக்கப்படுகிறது. கூடலூர், பந்தலூர் தாலுகாக்கள் மற்றும் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் ஆகிய இடங்களில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் கணிசமாக வசித்து வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு கூடலூரில் இருந்து சென்னை, கன்னியாகுமரி, செங்கோட்டை ஆகிய இடங்களுக்கு அரசு விரைவு பஸ்கள் இயக்கப்படுகிறது. அவை கூடலூர் பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு பயணிகளை ஏற்றி செல்வது வழக்கம்.
விரைவு பஸ்கள்
இந்த நிலையில் இடவசதி இல்லை என்றுக்கூறி கூடலூர் பஸ் நிலையத்தில் விரைவு பஸ்களை நிறுத்த போக்குவரத்துக்கழக அதிகாரிகள் அனுமதி மறுத்து வருகின்றனர். மேலும் புறப்படும் நேரத்தில் மட்டும் பஸ்களை நிலையத்துக்குள் கொண்டு வர வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளனர். இதனால் தொலைதூரத்தில் இருந்து வரும் பயணிகள் தங்களது உடைமைகள், குழந்தைகளுடன் விரைவு பஸ்களை எதிர்பார்த்து வெயிலில் காத்து கிடக்கும் அவலநிலை காணப்படுகிறது.
கூடாரத்தை அகற்ற வேண்டும்
இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:-
கூடலூர் பஸ் நிலையத்திற்குள் விரைவு பஸ்களை நிறுத்த விடுவது இல்லை. இதனால் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் விரைவு பஸ்கள் நிறுத்தப்படுகிறது. புறப்படும் சமயத்தில் மட்டுமே பஸ் நிலையத்துக்குள் வருவதால், முன்கூட்டியே வரும் பயணிகள் வெளியில் காத்துக்கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
இட வசதி இல்லை எனக்கூறும் அதிகாரிகள் பஸ் நிலையத்திற்குள் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு மட்டும் கூடாரம் அமைத்து உள்ளனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story