பெங்களூரு-துமகூரு இடையே மின்சார ரெயில்கள் இயக்க முடிவு
பெங்களூரு-துமகூரு இடையே மின்சார ரெயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு:
பெங்களூரு-ஹாசன் மாவட்டம் அரிசிகெரே இடையே டெமு ரெயில்களும், யஷ்வந்தபுரம்-துமகூரு இடையே மெமு ரெயில்களும் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரெயில்களில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். இந்த ரெயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் இந்த பாதைகளில் மின்சார ரெயில்கள் இயக்க வேண்டும் என்று பயணிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதற்கிடையே பெங்களூரு-அரிசிகெரே, யஷ்வந்தபுரம்-துமகூரு ரெயில் பாதையை மின்மயமாக்கும் பணிகளும் தற்போது நிறைவு பெற்று உள்ளது. இதனால் மேற்கண்ட ரெயில் பாதைகளில் மின்சார ரெயில்களை இயக்க தென்மேற்கு ரெயில்வே முடிவு செய்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
Related Tags :
Next Story