நடுவதீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.50 லட்சம் நிலம் மீட்பு
நாகை நடுவதீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.50 லட்சம் மதிப்பிலான நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.
வெளிப்பாளையம்:
நாகை நடுவதீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.50 லட்சம் மதிப்பிலான நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.
ஆக்கிரமிப்பு
நாகை நடுவதீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலம் வெளிப்பாளையம் பகுதியில் உள்ளது. இந்த நிலத்தில் 7 ஆயிரத்து 500 சதுர அடி இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறைக்கு புகார் வந்தது.
இதை தொடர்ந்து கோவில்களின் செயல் அலுவலர்கள் தங்கபாண்டியன், சீனிவாசன், சண்முகராஜ், கோவில் ஆய்வாளர் பக்கிரிசாமி, இந்து சமய அறநிலையத்துறை தனி தாசில்தார் அமுத விஜயரங்கன் மற்றும் கோவில் பணியாளர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர்.
ரூ.50 லட்சம் நிலம் மீட்பு
இந்த ஆய்வில் நடுவதீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 7 ஆயிரத்து 500 சதுர அடி நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது தெரிய வந்தது. இதை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை மீட்டனர். பின்னர் இரும்புகம்பி வேலி அமைத்து பூட்டி சீல் வைத்தனர்.
மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.50 லட்சம் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story