724 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.93½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்


724 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.93½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 7 April 2022 8:58 PM IST (Updated: 7 April 2022 8:58 PM IST)
t-max-icont-min-icon

நாகையில் 724 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.93½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.

நாகப்பட்டினம்:
நாகை கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், எம்.எல்.ஏக்கள் நாகைமாலி, முகமதுஷாநவாஸ், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் உமாமகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் வரவேற்றார்.
 விழாவில் அமைச்சர் மெய்யநாதன் கலந்துகொண்டு 724 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.93 லட்சத்து 56 ஆயிரத்து 584 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.  இதில் நாகை நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, நாகை ஒன்றியக்குழு தலைவர் அனுசியா உள்பட பலர் கலந்துகொண்டனர்.முடிவில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா நன்றி கூறினார். 

Next Story