லோடு ஆட்டோ- மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: மேலும் ஒரு சிறுவன் பலி
லோடு ஆட்டோவும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் மேலும் ஒரு சிறுவன் பலியானார்.
வலங்கைமான்:-
லோடு ஆட்டோவும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் மேலும் ஒரு சிறுவன் பலியானார்.
விபத்து
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள கல்விக்குடி மேல தெருவை சேர்ந்தவர் விஜயகுமார். இவருடைய மகன் பசுபதீஸ்வரன் (வயது17). சம்பவத்தன்று இவரும், இவருடைய நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த தீபன் (16), கலையரசன் (15), ராகவன் (16) ஆகிய 4 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் கோவிந்தகுடியில் இருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே திருகருக்காவூர் பகுதியில் இருந்து கோவிந்தகுடி நோக்கி வந்த லோடு ஆட்டோவும், மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த சிறுவர்கள் 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இவர்களை சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் பசுபதீஸ்வரன் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் ஒரு சிறுவன் பலி
அதைத்தொடர்ந்து தீபன், கலையரசன், ராகவன் ஆகிய 3 பேரும் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் தீபன், தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக வலங்கைமான் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயா, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேஷ்குமார், சிவபாலன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து லோடு ஆட்டோ டிரைவர் கல்விக்குடி பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவரை தேடி வருகிறார்கள். விபத்தில் மேலும் ஒரு சிறுவன் பலியான சம்பவம் அந்த பகுதியை சேர்ந்த மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story