ஓட்டப்பிடாரம் அருகே கைலாசநாத சாமி கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
கைலாசநாத சாமி கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே பசுவந்தனை கைலாசநாத சாமி சமேத ஆனந்தவல்லி அம்பாள் கோவில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருப்பள்ளி எழுச்சி, திருவனந்தல் காலசந்தி ஆகிய பூஜைகள் நடந்தது. காலை 9 மணிக்கு அங்குரார்ப்பணம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்று கொடி நான்கு வீதிகளில் வலம் வந்து கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. 16 வகையான வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. கொடியேற்ற விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலையில் சுவாமி, அம்பாள் சப்பர வீதி உலா நடக்கிறது.
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பசுவந்தனை கைலாசநாத விசுவநாத சாமி சமேத அகிலாண்டேஸ்வரி அம்பாள் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. விழாவை முன்னிட்டு காலை 8 மணிக்கு சுவாமி அம்பாளுக்கு அங்குரார்ப்பணம், காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இதனை தொடர்ந்து சுவாமி சப்பர வீதி உலா நடைபெற்றது. கொடி நான்கு வீதிகளில் வலம் வந்து 11 மணிக்கு கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தது. கொடியேற்றத்திருவிழாவின் போது திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story